தமிழில் கல்வி இணையம்..
"கற்றலில் உண்மையான விருப்பம் கொண்ட கற்பதற்கான வளங்களற்ற வறிய மாணவர்களும் அவர்களின் கல்வியுமே எமது இலக்கு "
தமிழில் கல்வி இணையம், கல்விச்சாலைகளுக்கு வெளியேயும் எமது கல்வியினை தமிழில் அனைவரும் பயனடையும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒரு செயற்றிட்டம்.

உலகளாவிய விடையங்களின் கல்விக்கான தரப்படுத்தலின் கீழ் வடிவமைக்கப்பட்ட கட்டுரைகள் இவ்விணையத்தில் பிரசுரமாகின்றன. கல்வியியலாளர்களின் எண்ணங்களில் உருவாகும் படைப்புக்களை நம்பகத்தன்மையுடன் வெளியிடுகின்றது தமிழில் கல்வி இணையம்.
அன்றாடம் வியாபாரப்பொருளாக மாறிவரும் கல்வியினை எட்டாத கனியாக எண்ணி வாழும் மாணவர்களுக்கான ஒரு தன்னம்பிக்கை ஊற்றாகத் தமிழில் கல்வி இணையம் வளர்ந்துவருகின்றது. இப்பயணத்தில் இணையும் கல்வியியலாளர்களுக்கு என்றுமே தமிழில் கல்வி இணையம் தனது நன்றிகளை உரித்தாக்குகின்றது.
கற்றலில் உண்மையான விருப்பம் கொண்ட கற்பதற்கான வளங்களற்ற வறிய மாணவர்களும், தமிழில் கல்வி இணையத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நலன் விரும்பிகளும் எமது VIP அங்கத்தவர்களாகின்றனர். நீங்களும் ஒரு VIP அங்கத்தவராகுவதற்கு உங்களால் இயன்ற பங்களிப்புடன் தமிழில் கல்வி இணையத்தில் இணைந்திருங்கள்.
தமிழில் கல்வி இணையம் தனக்கே உரிய இறுக்கமான இணைய கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கொண்டுள்ளது. அவற்றினையும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.http://www.tamilnotes.com/
தமிழில் கல்வி இணையத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள பல உறவுகளின் நீண்டநாள் அரவணைப்பு எமக்குக் கிடைத்த அளப்பரிய கிடைப்பனவாகும். இவ்விணையத்தினை தங்கள் இணையத்தில் இணைத்து இச்சேவையினை மேலும் தொடர்வதற்கு உந்துசக்தி வழங்கிய இணைய உலகின் உறவுகள் மற்றும் தமது ஏனைய வேலைப்பழுவுக்கு மத்தியிலும் சமூக நலங்கொண்டு எதையாவது படைக்கவேண்டும் என எண்ணி எம்முடன் எழுத்தாளராக இணைந்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் எமது சிரந்தாழ்ந்த நன்றிகள் என்றுமே உரித்தாகும்.
No comments:
Post a Comment