Tuesday 25 September 2012

அர்த்தமுள்ள இந்து மதம் -கவியரசு கண்ணதாசன்


இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள் என்பதை எளிய
விளக்கங்களுடன் கண்ணதாசன் போல் யாரும் சொல்ல முடியாது. நாத்திகனாக இருந்து
கம்பனை விமர்சிக்க ராமாயணம் படித்து, ஆன்மீகவாதிக மாறிப்போன ஒரு பெரும் புலவனின் சொற்பொழிவை தரவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

Download MP3

PART 1

PART 2

PART 3

PART 4

PART 5

PART 6

அத்தனைக்கும் ஆசைப்படு


சத்குரு ஈஷா அவர்கள்  யோகாவை விஞ்ஞானக் கருவியாகப் பயன் படுத்தி பல லட்சம் மனிதர்களை மேம்படுத்தி சமூகத்திற்கும் அர்ப்பணித்தவர். அத்தனைக்கும் ஆசைப்படு! விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டது.

DOWNLOAD

சுயசரிதம் – உலக மாமனிதர்களின் வாழ்கை வரலாறு

இளைஞர்கள் காலம் – டாக்டர் அப்துல் கலாம்


இளைஞர்கள் காலம் என்ற தலைப்பில் நக்கீரன் பத்திரிகையில்  டாக்டர் அப்துல் கலாம் எழுதிய தொடர். இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் தொடர் ! இளைய தலைமுறைக்கான  தன்னம்பிக்கைத் தொடர்!
டவுன்லோட் செய்ய கீழே சொடுக்கவும்

DOWNLOAD

வெற்றி நிச்சயம் -சுகி சிவம்


வெற்றி நிச்சயம்  சுகி சிவம்  எழுதிய தன்னம்பிக்கை தொடர், சிறு
சிறு கதைகள் முலமாக சொல்லியிருக்கிறார்

DOWNLOAD

MANASE RELAX PLEASE – சுவாமி சுகபோதானந்தா


சுவாமி சுகபோதானந்தா அவர்களின்……
“MANASE RELAX PLEASE.”
[மனசே தயவு செய்து ஓய்வெடு.]
சுவாமி சுகபோதானந்தா 
தெளிவு பெற்ற ஓர் ஆன்மீக குரு. “LIFE” (Living in Freedom & Enquiry Programme) மற்றும் YPL(Yogic Linguistic Programming) முறைகளை உருவாக்கியவர். பழுத்த வேதாந்த அனுபவம் கொண்ட மேலாண்மை குரு.
சுவாமிஜி இங்கிலாந்தில் அத்தாட்சி பெற்ற NPL முறை பயிற்சியாளராக இருந்தவர். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய போதனா முறைகளில் ஆழ்ந்த ஞானம் உண்டு. மகத்தான பாரம்பரிய ஆசான்களிடம் பயின்ற இவருக்கு அதிநவீன மேலாண்மை உத்திகளுடன் தொடர்ந்து வரும் தொடர்பு உண்டு. முன்னணி தொழிலகங்கள், தங்கள் அதிகாரிகளுக்காக “IN HOUSE WORKSHOP” நடத்த இவரை அழைக்கிறார்கள். சுவாமிஜியின் “LIFE” என்றபெயரில் புகழ்பெற்ற SELF DEVELOPMENT PROGRAMME துணை கொண்டு கூட:டாண்மைத் துறையில் பலரும், ஏராளமான பொதுமக்களும் பலன் அடைந்திருக்கிறார்கள். கூட்டாண்மைத்துறைக்கென்றே விசேசமாக HARMONY & CREATIVITY AT WORK என்ற முறையை சுவாமிஜி அமைத்திருக்கிறார். தியான முறையில் அறிவியல் கண்ணோட்டம் பற்றி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இளைஞர் முகாம்களை நடத்தி வருகிறார்.
இவற்றைத்தவிர, சுவாமிஜியின் ஊக்குவிப்புடன் வழிகாட்டுதலுடனும் பிரசன்னா டிரஸ்ட், ஆதரவற்ற குழந்தைகளுக்காக பிரசன்ன ஜோதி என்ற அனாதை இல்லமும் நிர்குண மந்திர் என்ற தியானப்பயிற்சி நிலையமும் நடத்தி வருகிறது.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற இவரது புத்தகம் முன்பு எப்போதும் கண்டிராத சாதனை படைத்திருக்கிறது. அதன் ஒலிவடிவத்தை இங்கே தருகின்றோம்.
குரல் கொடுத்தவர்:- “நிழல்கள்” ரவி

DOWNLOAD PDF

DOWNLOAD AUDIO

PART -1

PART -2

PART -3

அக்னிச் சிறகுகள் – ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்


அக்னிச் சிறகுகள்

நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை…
நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்…
இந்தப் ‘பாரதரத்னத்தின்’ அறிவியல் தவச்சாலையில்
பற்றி எறிந்த ‘அக்கினி’ பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது…
தினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும்
கைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை…
இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார்.
இது இவர் கதை மட்டுமல்ல.
இந்திய அறிவியலின் மேன்மைக் கதை…
சோதனைகளின் சாதனைக் கதை…
உறுதிகொண்ட நெஞ்சின் ஓயாத உழைப்பின் கதை…
தாயகம் சாதித்துவிட்ட தன்னிறைவின் கதை…
தீர்க்க தரிசனத்தின் கதை…
ஒரு கடலோரப் படகுக்காரர் மகன்
கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை.
ஒரு கவிஞன் விஞ்ஞானி ஆன கதை!
எ.பி.ஜே.அப்துல்  கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்கினிச்சிறகுகள் என்ற நூலை மின்நூலாக உங்களுக்காக  வழங்குகின்றேன். பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

DOWNLOAD

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு – எஸ். திருச்செல்வம்


மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

DOWNLOAD

தேசிய கீதம்


ஜன கன மன அதிநாயக, ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா
விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதிதரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கன மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே,
ஜய ஜய ஜய, ஜய ஹே!

DOWNLOAD AUDIO MP3

ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.
பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா
ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.
புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.
பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் – குஜராத் மாநிலம் உன்னுடையது .
வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் – மராட்டிய மாநிலம் உன்னுடையது .
பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.
பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.
இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் – பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .
இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.
விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.
மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.
இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.
இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.
உச்சல ஜலதி தரங்கா – மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.
தவ சுப நாமே ஜாகே – உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
தவ சுப ஆஷிஸ மாகே – உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.
காஹே தவ ஜய காதா – உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.
ஜன கன மங்கல தாயக ஜய ஹே – இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! – வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

தமிழில் கல்வி இணையம்..


தமிழில் கல்வி இணையம்..

"கற்றலில் உண்மையான விருப்பம் கொண்ட கற்பதற்கான வளங்களற்ற வறிய மாணவர்களும் அவர்களின் கல்வியுமே எமது இலக்கு "
தமிழில் கல்வி இணையம், கல்விச்சாலைகளுக்கு வெளியேயும் எமது கல்வியினை தமிழில் அனைவரும் பயனடையும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒரு செயற்றிட்டம்.
TamilNotes.com all rights reserved..
உலகளாவிய விடையங்களின் கல்விக்கான தரப்படுத்தலின் கீழ் வடிவமைக்கப்பட்ட கட்டுரைகள் இவ்விணையத்தில் பிரசுரமாகின்றன. கல்வியியலாளர்களின் எண்ணங்களில் உருவாகும் படைப்புக்களை நம்பகத்தன்மையுடன் வெளியிடுகின்றது தமிழில் கல்வி இணையம்.
அன்றாடம் வியாபாரப்பொருளாக மாறிவரும் கல்வியினை எட்டாத கனியாக எண்ணி வாழும் மாணவர்களுக்கான ஒரு தன்னம்பிக்கை ஊற்றாகத் தமிழில் கல்வி இணையம் வளர்ந்துவருகின்றது. இப்பயணத்தில் இணையும் கல்வியியலாளர்களுக்கு என்றுமே தமிழில் கல்வி இணையம் தனது நன்றிகளை உரித்தாக்குகின்றது.
தமிழில் கல்வி இணையம் தனக்கே உரிய இறுக்கமான இணைய கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கொண்டுள்ளது. அவற்றினையும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.http://www.tamilnotes.com/
தமிழில் கல்வி இணையத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள பல உறவுகளின் நீண்டநாள் அரவணைப்பு எமக்குக் கிடைத்த அளப்பரிய கிடைப்பனவாகும். இவ்விணையத்தினை தங்கள் இணையத்தில் இணைத்து இச்சேவையினை மேலும் தொடர்வதற்கு உந்துசக்தி வழங்கிய இணைய உலகின் உறவுகள் மற்றும் தமது ஏனைய வேலைப்பழுவுக்கு மத்தியிலும் சமூக நலங்கொண்டு எதையாவது படைக்கவேண்டும் என எண்ணி எம்முடன் எழுத்தாளராக இணைந்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் எமது சிரந்தாழ்ந்த நன்றிகள் என்றுமே உரித்தாகும்.

பாரதத்திற்கு எத்தகைய கல்வி தேவை


பாரதத்திற்கு எத்தகைய  கல்வி தேவை

என் தாய்த் திருநாட்டு மக்களே! நண்பர்களே! என் இளமைச் செல்வங்களே! நம்முடைய இந்தத் தாய்த் திருநாடாகிய தேசியக்கப்பல் இதுவரைக்கும் லட்சக்கணக்கானோரை வாழ்க்கை எனும் பெருங்கடலிலிருந்து கரையேற்றி வந்துள்ளது. ஒளிமயமான நம்முடைய பண்டைக் காலத்திலிருந்து, பன்னூறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தோணி நம் வாழ்க்கைக் கடலில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தோணியின் உதவியினால் ஆயிரக்கணக்கானோர் முக்தி என்னும் மறுகரையை அடைந்துள்ளனர்.
ஆனால் இன்றோ! இந்தக் கப்பல் நம்முடைய தவறினாலோ என்னவோ சற்று பழுதடைந்துள்ளது. சிறிதே பழுதடைந்துள்ளது. துளைகளின் வழியாக நீர் உள்ளே கசிந்து கொண்டிற்குக்கிறது. அதற்காகக் கப்பலை குறைகூறிப் பழிக்க முடியுமா? காலங்காலமாக எது நமக்கு உதவி வந்ததோ, இவ்வுலகில் வேறு எந்தப் பொருளையும் விட எது நமக்காக அதிகமாகப் பாடுபட்டு வந்துள்ளதோ அதையா பழிப்பது? அதையா சபிப்பது? இது நேர்மைதானா? இது முறையா? நம்முடைய இந்தத் தாய்த் திருநாடாம் கப்பலில் தவறுகள் என்னும் துளைகள் விழுந்தால் அந்தத் துளைகளை, அந்தத் தவறுகளைச் செய்தவர்கள் யார்? நாம் அல்லவா? நம்முடைய இச்சமுதாயம் தானே?
எனவே நாமே முயன்று அந்தத் துளைகளை அடிப்போம். நமது அறிவை, சிந்தனையை அடைப்பானாக்கி கப்பலில் கண்ட துளைகளை நிரப்பிவிடுவோம். இதுவன்றி, ஒருநாளும் ஏச வேண்டாம். பழிக்க வேண்டாம். சமுதாயத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசவேண்டாம்          நமது நாட்டின் பண்டைய பெருமையைக் கண்டு அதன் உன்னதங்களை உணர்ந்து அதன் மீது தனியாக் காதல் கொண்டிருக்கிறேன். உங்களையெல்லாம் உளமார நேசிக்கிறேன். எல்லாம் வல்ல இறைவனின் அன்புக் குழந்தைகள் அல்லவா நீங்கள்? சீர்மையும் சீலமும் மிக்க நம் முன்னோர்களின் வழித்தோன்றல்கள் அல்லவா நீங்கள்? உங்களை விரும்பாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? உங்களை என்னால் சபிக்க  முடியாது. உலகிலுள்ள எல்லா வாழ்த்துகளும் உங்களுக்கு உரித்தாகுக!என் அன்பிற்குகந்த மாணவச் செல்வங்களே! நான் என்ன செய்யப் போகிறேன்? என்னுடைய பணித் திட்டங்கள் என்ன என்பதை உங்களுக்கு விளக்குவதற்காக உங்கள் நடுவே வந்து அமரப் போகிறேன்.
என்பணித் திட்டங்களைக் கேட்ப்பீர்கலானால், ஏற்ப்பீர்கலானால் உங்களோடு நானும் சேர்ந்து தோளோடு தோள் சேர்த்து செயலாற்றக் காத்திருக்கிறேன். என் சொற்களைக் கேட்க மறுத்து, ஒரு வேலை இந்த நாட்டை விட்டு என்னை துரத்தினாலும் நான் என் தாய்த்திருநாட்டிற்கு திரும்பி வருவேன். திரும்பி வந்து நம்முடைய பழம்பெரும் நாடான தாய்நாடு என்னும் கப்பலில் தற்போது தோன்றியுள்ள துளைகளால் நாமெல்லாம் மெல்ல முழ்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு எடுத்துரைப்பேன். மூழ்குவதானாலும் உங்களுடன் சேர்ந்து மூழ்குவேன். ஆனால் மறந்தும் தாய்நாட்டைப் பழிக்கும் சாபக்கேடுகள் நம்மிடம் எழவேண்டாம்.
நம் நாட்டுக் கல்வியில், ஆன்மீகக் கல்வி, உலக நடைமுறைக் கல்வி ஆகிய இரண்டிலும் நமக்கு பிடிப்பு இருக்க வேண்டும். உரிமை இருக்க வேண்டும். இந்த இரண்டையும் அடித்தளமாகக் கொண்டே நமது கல்வி உருவாக வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? சொல்லப் போனால் நாம் காணும் கனவு, பேசுகிற பேச்சு, நம்முடைய எண்ணம, வேலை எல்லாமே இதப் பற்றியதாகவே இருக்க வேண்டும். இல்லாமல் நம் இனத்திற்கு விடிவு தோன்றாது  இன்று நீங்கள் பயின்று வரும் கல்வியில் சில நல்ல கருத்துகள் இருக்கலாம். இருப்பினும் இந்தக் கல்வியால் தீமைகளே பெருகியுள்ளது.
எவையெல்லாம் நல்லனவோ அவையெல்லாம் அடிபட்டு அடிமட்டத்திற்கு போய்விட்டன. முதலில் அது மனிதனை உருவாக்கும் கல்வியில்ல. எதிர்மறையான கல்வியாகவே அது முழுக்க முழுக்க அமைந்துள்ளது. எதிர்மறையானப் பயிற்சி மரணத்தை விட நாசம் செய்யக் கூடியது. குழந்தையை பள்ளிக் கூடத்திற்கு அனுப்புகிறோம். அங்கே அது முதன் முதலாக கற்பதென்ன? என் தந்தை ஒரு முட்டாள், இரண்டாவதாக என் தாத்தா ஒரு பைத்தியக்காரன். மூன்றாவதாக ஆசிரியர்கள் அனைவரும் வேஷதாரிகள். போலி ஆசாமிகள். நான்காவதாக அக்குழந்தை அறிந்துகொள்வது நம் சாஸ்திரங்கள் அனைத்தும் புளுகு மூட்டைகள். அந்தக் குழந்தைக்குப் பதினாறு வயது ஆகும் போது அத்தகைய முரண்பட்ட கல்வியினால் அவனுக்கு நம்முடையது எதுவும் நல்லதாக தெரிவதில்லை. மறுப்புணர்ச்சியின் ஒரு மொத்த வடிவமாகவும், உயிரும் எலும்பும் இல்லாத ஒரு சதைப் பிண்டமாகவும் ஆகிவிடுகிறான்.
கல்வி என்பது மூளையே குழம்பிப் போகும் அளவிற்கு விஷயங்களை திணிப்பதல்ல. வாழ்நாள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாதபடி ஒருவனது அறிவைக் குழப்புவதல்ல. நம்முடைய கல்வி நமது வாழ்கையை நல்ல விதமாக உருவாக்குவதாக, குறிக்கோளை நம்மிடம் உருவாக்குவதாக அமைய வேண்டும்.ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்துகொண்டாலே போதும். அவற்றின் வழி உன் வாழ்கையை, உன் ஒழுக்கத்தை அமைத்துக் கொண்டால் நீயே நன்கு கற்றவனாகிறாய்.
நூல் நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்று விடாமல் படிக்கிற புத்திசாலியை விட நீயே மெத்தப் படித்தவனாக இருப்பாய்.வெறும் செய்திகளைத் தருவது தான் கல்வி என்றால் நூல் நிலையங்களே உலகில் மாபெரும் முனிவர்களாக இருக்குமே! கலைக்களஞ்சியங்களையே உண்மையை கண்டு கொண்ட ரிஷிகள் எனலாமே!
எனவே நாம் அமைக்கும் கல்வி நாடு முழுமைக்கும் பொதுவாக விளங்கும் கல்வியாக, ஆண்மீகத்தைக் கொண்டதாக, உலக நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அத்துடன் நம் கட்டுப் பாட்டிற்குள் நாமே அமைக்கும்படியான உரிமையும் நமக்கு வேண்டும். மேலும் தேசியப் பண்பாட்டிற்கு ஏற்றதாகவும், வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடிய பண்பாட்டுக் கல்வியாகவும் இருத்தம் இருத்தல் அவசியம்
–விவேகானந்த

மக்களுக்கு நமது கடமை


     மக்களுக்கு நமது கடமை

          இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்திருக்கும் வேறாக இருக்கின்ற ஒரே விஷயம் ஏழைகளின் நிலைமை. மேலை நாட்டின் ஏழைகள் பேய் பிசாசுகள்; அவர்களுடன் ஒப்பிட்டால் நமது ஏழைகள் தேவதைகள். எனவே நமது ஏழைகளின் நிலைமையை உயர்த்துவது மிக எளிது. நமது நாட்டின் தாழ்ந்த வகுப்பினர்க்குச் செய்ய வேண்டிய ஒரே சேவை கல்வி அளிப்பது. அவர்கள் இழந்த தனித்துவத்தை மீண்டும் பெறச் செய்வது. நமது நாட்டின் மக்களும் மன்னர்களும் செய்ய வேண்டிய பெரும் பணி இதுவே. இதுவரையில் இந்த துறையில் ஒன்றுமே செய்ய பட வில்லை. புரோகித ஆதிக்கம் , அன்னியரின் ஆக்கிரமிப்பும் நூற்று ஆண்டுகளாக அவர்களைக் கீழே தள்ளி மிதித்து வந்துள்ளன. இறுதியில் இந்தியாவின் ஏழைகள் தாங்கள் மனித பிறவிகள் என்பதையே மறந்து விட்டனர். அவர்களுக்கு கருத்துகளை அளிக்க வேண்டும். தாங்களை சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியுமாறு அவர்களின் கண்கள் திறக்க பட வேண்டும். பிறகு அவர்கள் தங்கள் உயர்வை தாங்களே தேடிக் கொள்வார்கள். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு ஆணும் , ஒவ்வொரு பெண்ணும் தங்கள் உயர்வை தாங்களே தேடிக்கொள்ள  வேண்டும். கருத்துக்களை  அவர்களுக்கு கொடுங்கள் – வேண்டிய உதவி அது ஒன்றே. மற்றவையெல்லாம் அதன் விளைவாக தொடர்ந்து  வந்தே தீரும். ரசாயனப் பொருட்களை சேர்த்து வைப்பது நமது வேலை, இயற்கை நியதிக்கு ஏற்ப படிகமாதல் தானாகவே நிகழும். அவர்களின் மூளையில் கருத்துகளை புகுத்துவது நமது கடமை, பிறவற்றை அவர்கள் செய்து கொள்வார்கள், இந்தியாவில் செய்ய வேண்டியது இதுதான்.
           ஏழைகளுக்கு கல்வி அளிப்பதிலுள்ள பெருங் கஷ்டம் இதுதான் . நீங்களே கிராமந் தோறும் இலவச பள்ளி ஒன்றை ஏற்படுத்துகீரிகள் என்று வைத்து கொள்வோம். அதனால் எந்த நன்மையும் வராது. ஏழை சிறுவர்கள் பள்ளிக்கு வருவதை விட வயல்களுக்கு சென்று தங்கள் தந்தைக்கு உதவுவார்கள், அல்லது வேறு வழியில் பிழைப்புக்கு வழி தேட முயல்வார்கள். இந்தியாவில் வறுமை அவ்வளவு கடுமையானது. எனவே மலை முகமதுவை  நாடி வாரவிட்டால் , முகமது மலையை நாடி செல்ல வேண்டும். ஏழை சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்வி அவனிடம் செல்ல வேண்டும். நமது நாட்டில் திட சித்தமுள்ள சுயநலமற்ற துறவிகள் உள்ளனர். அவர்கள் கிராமம் கிராமமாக சென்று மதத்தை போதிக்கவே செய்கின்றனர். அவர்களுள் சிலரை உலக விஷியங்களையும் போதிக்கின்ற ஆசிரியர்களாக்க முடியுமானால், அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று , வீடு வீடாக மத போதனை செய்வதுடன் உலகக் கல்வியும்  அளிப்பார்கள். இவர்களுள் இருவர் மாலை வேளைகளில் ஒரு கிராமத்திற்கு போகலாம்; காமார, பூகோளம் , தேசப் படங்கள் இவற்றில்  உதவியுடன் பாமர மக்களுக்கு வான இயல் , புவியியல் என்று எவ்வளவோ சொல்லித்தரலாம். பல்வேறு நாடுகளை பற்றிச் சொல்லலாம். ஆயுள் முழுவதும் நூல்களைப் படித்து அறிவதை விட நூறு மடங்கு அதிகமானவற்றை அவர்கள் இவ்வாறு செவி வழியாகக் கற்க முடியும்.
மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்கள் அடங்கிய கல்வி விபரங்களை நான் படிக்க மாட்டேன். முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், நல்ல பண்பாட்டினையும் வளர்த்துக் கொள்வேன். அதன்பிறகு, மனம் பண்பட்டு விடும். மனம் என்னும் பண்பட்ட கருவி கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை அறிந்து கொள்வேன்.கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டு திணித்து வைப்பதன்று. அப்படி திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் அஜீரணத்தால் உனக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும்.
–சுவாமி விவேகானந்தா

கல்விமுறை


கல்விமுறை

பண்டைய காலத்தில், ஏன் ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முந்தைய அண்மைக்காலம் வரை, தற்போது முறைசாராக் கல்வி என்று அழைக்கப்படும் குருகுல வழிக்கல்வி முறையே இந்திய சமூகத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழிந்து போய்விட்ட இம்முறை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் இன்று பலர் மறந்து போய் விட்டார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
குருகுலம் என்றால் என்ன?
ஏதாவது ஒரு கலையை அல்லது கல்வியைப் பயில விரும்பும் மாணவன் ஒருவன், முதலில் ஒரு குருவைத் தேர்ந்தெடுத்து அவரை அணுகுவான். அவரும் அவன் உண்மையில் கற்பதற்கு ஆர்வமாக உள்ளானா, அக்கல்வியைக் கற்பதற்கு அவனுக்குத் தகுதி உள்ளதா என்பன போன்றவற்றை அறிவதற்கு சில சோதனைகளை வைத்து அதில் அவன் தேர்வு பெற்றுவிட்டால் அவனைத் தனது குருகுலத்தில் சேர்த்துக் கொள்வார். அவனும் குருவுடனேயே தங்கியிருந்து அக் கலையை/கல்வியை பயில்வது தான் குருகுலக் கல்விமுறை.
அதில் என்ன சிறப்பு?
அங்கே கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு போன்ற ஒழுங்கு முறைகள் மாணவன் பயிலும் கலைக்கு மேலதிகமாகக் கற்பிக்கப் பட்டது. காலை எழுந்து காலைக் கடன்கள் மற்றும் யோகப்பயிற்சி முடித்து விட்டு குளித்தலில் இருந்து குருவுக்குத் தேவையான தொண்டுகள் முதற்கொண்டு அவனுக்கு வழங்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுதல் மூலம் அங்கே ‘கடமை’ என்றால் என்ன என்பது கற்பிக்கப்பட்டது.
குருகுலத்தில் வயதில் கூடிய பெரியோர்களை மதித்து நடத்தல்; சக மாணவர்களுடன் ஆரோக்கியமான போட்டிகளில் மட்டுமே ஈடுபடல்; எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நாவடக்கம் பேணுதல் போன்றவற்றின் மூலம் அங்கே ‘கண்ணியம்’ என்றால் என்ன என்பது கற்பிக்கப்பட்டது
குருகுலத்தில் பல சட்டதிட்டங்கள் இருக்கும்; அது மாணவனுக்கு குருவால் அறிவுறுத்தப் பட்டிருக்கும்; உதாரணமாக சில குறிப்பிட்ட கட்டளைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டியிருக்கும்; உதாரணமாக வாய்ப்பாட்டு, நடனப் பயிற்சிகள் இளவெய்யில் முடியுமுன் முடிந்துவிடும்; அப்போதுதான் குரல்வளம், உடல் வளம் சிறக்கும். இது போன்ற சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடத்தல் மூலம் ‘கட்டுப்பாடு’ என்றால் என்ன என்பதும் கற்பிக்கப்பட்டது.
இந்த மூன்றையும் (கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு) தான் பயிலும் கலைக்கு மேலதிகமாக பயின்று குருகுலத்தில் இருந்து வெளிவரும் நல்ல நடத்தையுள்ள மாணவனே நாட்டிற்கு நல்லதொரு குடிமகனாகவும் வீட்டிற்குப் பயனுள்ளவனாகவும் இருந்தான் என்பது வரலாறு காட்டும் உண்மை.
குடியேற்ற நாடுகளில் தங்கள் நிர்வாகம் செய்ய இங்கிலாந்தில் இருந்து அலுவலர்களைக் கொண்டு வந்தனர். அது சுரண்டிய பொருளாதாரத்தில் கணிசமான பகுதியை உறிஞ்சியது. ஆக, அடிநிலை, இடைநிலை நிர்வாகத்திற்குத் தேவையான அலுவலர்களை உள்ளூரில் உருவாக்கினர். கணிதம், ஆங்கிலத்தை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை மிசனரி பாடசாலைகளில் புகுத்தினர். கற்றுத் தேறியவர்களுக்குச் சான்றிதழ் கிடைத்தது. கூடவே வேலையும் கிடைத்தது. படிப்பு முடிய சான்றிதழ் கிடைக்கும் வகையிலான தமது கல்வி முறையில் படித்து முடித்தவர்களுக்கே வேலை என்பதை நடைமுறைப்படுத்தியதன் மூலம் குருகுலக் கல்விமுறை மெல்ல மெல்ல தளர்ந்து, நலிந்து, ஒழிந்தது. தமது கல்விக்கு, கல்விமுறைக்கு முற்றிலுமாக எம்மை அடிமைப் படுத்திக் கொண்டார்கள் புத்திசாலிகளான ஆங்கிலேயர்கள். இப்படித்தான் இந்தியர்கள், ஆங்கிலக் கல்விமுறைக்கு அடிமையாகி அவர்களின் நடை-உடை-பாவனைகளுக்கு அடிமையாகி இறுதியில் ஆங்கிலேயர்களுக்கே அடிமையான கதை. அந்த அடிமைத்தனம் இன்றும் தொடர்வதுதான் வேதனையான சோதனை. ஆம் ஆங்கிலேயர் உட்பட்ட பல்வேறு வேற்றுமொழி ஆக்கிரமிப்பாளர்களால் பல்வேறு காலகட்டங்களில் இந்தியர்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அவர்களிடம் அடங்கி அடங்கி ஒரு அடிமைத்தனம் தமிழர்களுக்கு நிரந்தரமாகவே வந்துவிட்டது!
இன்றைய கல்வி :
ஆங்கிலேயரின் கல்வியில் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்பனவற்றிற்கு தற்போது பார்க்கப் போனால் துளியளவும் இடம் இல்லையென்று சொன்னாலும் பொருந்தும். வேண்டுமானால் இங்கு பல்கலையில் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களையோ பாடசாலையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையோ மாணவர்களின் நடத்தையைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்; நாம் சொல்லும் உண்மை புரியும்! கற்பிக்கப்படும் நேரத்தில் சகமாணவனுடன் பேசுதல்; உணவு உண்ணல்; எழுந்து வெளியே செல்லுதல்; ஆசிரியரை மதித்து நடக்காமை; குற்றச் செயல்களில் ஈடுபடுதல் போன்றன இதற்கு சில உதாரணங்களாகும். இதற்கு மேலதிக உதாரணமாக மேற்கத்தியக் கல்விமுறையில் பயின்று வெளிவந்த எமது தமிழ்ப் பிள்ளைகளைப் பாருங்கள்; அவர்களில் எத்தனை பேருக்கு கடமை-கண்ணியம் கட்டுப்பாடு என்பன இருக்கிறது? இருந்தால் எவ்வளவு வீதம் இருக்கிறது என்று சோதித்துப் பாருங்கள்; மேற்கத்தியக் கல்விமுறையின் வண்டவாளங்கள் தெரியும். மாணவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரியோர்களை கனம் பண்ணுதல், நாவடக்கம், ஆரோக்கியமான போட்டி, பண்பாக நடந்து கொள்ளுதல் போன்ற நன்நடத்தை இல்லாவிட்டால் அம்மாணவனால் நாட்டிற்கும் வீட்டிற்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் ஏன் உலகிற்கும் என்ன பயன்?
தவிர இன்றைய கல்விமுறையில் படித்து வெளிவந்த மாணவர்கள் வேலைக்கு முயற்சி செய்யும்போது, அவர்களிடம் என்ன KASH (K-Knowledge, A-Attitude, S-Skill, H-Habit) இருக்கிறது என்பதை வைத்துத்தான், அவர்களுக்கு வேலை கொடுக்கலாமா? வேண்டாமா? என்று வேலைவாய்ப்பு நிறுவனங்களால் தீர்மானிக்கப் படுகிறது. இது தெரிந்துதானே எமது குருகுல முறையில் கலைக்கு/கல்விக்கு மேலதிகமாக கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு மற்றும் மேலும் பல விடயங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். இப்போதைய கல்வி முறையில் இவை சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. மாணவன் வேறு விதமாகக் கற்றுக் கொண்டால் ஒழிய அம்மாணவனிடம் இவை இருக்கக் காரணமில்லை.
 ஆக, தற்போது கல்வி என்பதே வியாபாரமாக ஆகிப் போய் விட்ட நிலையில், மீண்டும் குருகுலக் கல்விமுறை நடைமுறைப்படுத்தப் பட்டால் தான், குறைந்தது இந்தியர்களான எமது பிள்ளைகள் நன்நடத்தை பயின்று நாட்டுக்கும் வீட்டுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள். இவற்றை எமது தாய்நாட்டு அரசாங்கங்கள் உணர்ந்து செயற்படுவது அவசியம். ஆனால் அரசியலால் சீரழிந்து போயுள்ள எமது நாடுகளின் அரசாங்கங்கள் தமது மற்றைய கடமைகளையே சிறப்பாகச் செய்து முடிக்க முடியாமல் இருக்கும் போது அவர்கள் இதை நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். ஆனாலும் எமது நாடுகளில் இன்றும் பணபலம் கொண்ட தனிப்பட்ட சிலர் இம்முறையை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டுதான் இருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் குருகுல வாசக்கல்வி முறை நடைமுறைப் படுத்த முடியாது என்றாலும் அது போன்ற ஒன்றை விடுமுறைக்காலங்களில் மட்டுமாவது எமது சிறார்களுக்கு நடைமுறைப் படுத்தலாமே! உதாரணமாக வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புக்கள், ‘தமிழ்ப்பாடசாலை’ என்ற, தமிழ்ப்பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் வகுப்புக்களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. இவை பொதுவாக சனி-ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை விட மாதம் ஒருமுறை மற்றும் முடிந்தால் பாடசாலை விடுமுறைகளிலும், பெரியவர்களின் வழிநடத்தலின் கீழ், குருகுலம் போன்றதொரு கல்வி முறையை நடத்தி, அங்கே தமிழ் மற்றும் இந்த்திய கலாச்சார கற்பித்தலும் மேலதிகமாக கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு போன்ற நன்நடத்தைக்கு உதவும் பல்வேறு விடயங்களையும் கற்பிக்கலாமே!